போபால்

த்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்ததால் ஞாயி|ற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு ரத்து செய்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலானது.   அதன்பிறகு கொரோனா பாதிப்பு மேலும் மேலும் குறையத் தொடங்கியது.   இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.   ஆயினும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு  ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோன பாதிப்பு மிக மிக குறைந்து வருகிறது.  நேற்று இங்கு 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது 927 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.  இதையொட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கை ரத்து செய்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரத்து செய்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் இந்தி மொழியில், “ம பி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.  35 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை,  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1000க்கு கீழே சென்றுள்ளது.  இவை அனைத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்ய உள்ளோம்” என அறிவித்துள்ளார்.