டில்லி

பிரதமர் பதவிக்கு மோடிக்கு எதிராக களமிறங்கலாம் என பாஜக தலைமை பயப்படுவதால் அவரை சமாதான செய்ய தூதர்களை அனுப்பி உள்ளாதாக “ஹஃப்போஸ்ட்” கூறி உள்ளது.

பிரபல செய்தி ஊடகமான “ஹஃப்போஸ்ட்” வரும் 2019 தேர்தல் குறித்தும் பாஜக தலைமையின் தற்போதைய நிலை குறித்தும் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் காணப்படுவதாவது :

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுபவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. ஆர் எஸ் எஸ் இயக்கத் தலைவர்கள் வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் நிதின் கட்கரியை முன் நிறுத்த வேண்டும் என கூறி வருகின்றனர். மோடிக்கு தற்போது நாட்டு மக்களிடையே எதிர்ப்பு உள்ளதால் அவரை நிறுத்த வேண்டாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கு ஏற்ப நிதின் கட்கரி பாஜகவை பற்றி அடிக்கடி விமர்சஙகள் எழுப்பி வருகிறார். சென்ற வருடம் அக்டோபரில் இதை வெளிப்படையக கட்கரி தெரிவித்தார். நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி குறித்து கட்சி தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கடந்த 2014 ஆம் வருடம் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததும் தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெயர் தெரிவிக்க விரும்பாத ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர், ”கடந்த 2014 வருட தேர்தலின் போது நிதின் கட்கரியை பிரதமராக முன் நிறுத்த எங்கள் இயக்கம் விருமியது. ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலாக நாங்கள் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏறுக்கொண்டோம். அத்துடன் பாஜக அந்த தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருக்க்காவிடில் நிதின் கட்கரி தாம் பிரதமராக பதவி ஏற்க ஒப்புக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தலைவர், “ஆர் எஸ் எஸ் இயக்கம் நிதின் கட்கரியை தொடர்ந்து ஆதரித்து வருவது அனைவருக்கும் தெரியும். இயக்கத்தின் வற்புறுத்தலால் அவர் மகாராஷ்டிர அமைச்சரவையில் பிரமோத் மகாஜன் எதிர்ப்பையும் மீறி இணைக்கப்பட்டார். அதைப் போலவே மத்திய அமைச்சரவையிலும் அவர் ஆர் எஸ் எஸ் பரிந்துரையின் மூலம் சேர்க்கப்பட்டார். நாங்கள் வரும் 2025 க்குள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க விரும்புகிறோம். அதற்கு எங்களுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் பொறுப்பில் இருக்க வேண்டியது அவசியம்” என தெரிவித்துள்ளார்.

இத்தகைய செய்திகாளால் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் தரப்பு பெரிதும் அச்சமடைந்துள்ளது. ஆகவே அவர்கள் நிதின் கட்கரியை சமாதானப்படுத்த எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் ஒரு தூதுக் குழுவினரை கடந்த வார இறுதியில் நிதின் கட்கரியை சந்திக்க அனுப்பி உள்ளனர்.

அவர்களிடம் நிதின் கட்கரி தனது தரப்பை கூறியதோடு தேர்தல் வாக்குறுதிகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது எனவோ மற்றவர்களால் திரித்துக் கூறப்பட்டது எனவோ மோடி கூறுவது தவறானது என எடுத்துச் சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தூதுக் குழிவின் தலைவர் நிதின் கட்கரியின் தரப்பை பாஜக தலைமைக்கு தெரிவித்துள்ளதாகவும் தலைமை விரைவில் முடிவு எடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

என ஹஃப்போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.