ட்டன்சத்திரம்

பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் ஒட்டன்சத்திரம் அங்காடியில் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான வெரியப்பூர், வடகாடு, வண்டிப்பாதை, பெத்தேல்புரம், அத்திக்கோம்பை, ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, பெரியகோட்டை, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, 16 புதூர், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கொத்தயம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பீட்ரூட் பயிரிட்டுள்ளனர்.

இங்குள்ள விவசாயிகள் விளைவித்த பீட்ரூட்டை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி அங்காடிக்கு விற்பனைக்காகக் கொண்டு வருவது வழக்கமாகும். தற்போது பீட்ரூட் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. இம்முறை இந்த பகுதியில் பீட்ரூட் விளைச்சல் மிகவும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடந்தனர்

ஆனால் பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி அங்காடியில் விலை மிகவும் குறைந்துள்ளது. ஒரு கிலோ பீட்ரூட் கடந்த மாதம் ரூ.15க்கு விற்பனையானது  ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை பன்மடங்கு குறைவடைந்து ஒரு கிலோ ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி  விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.