டில்லி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றைய பட்ஜெட்டினால் மேலும் உயரக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2021-22க்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.  அப்போது அவர் பல பொருட்களுக்கு வரி விகிதம் மற்றும் கூடுதல் வரி விதிகங்களை அதிகரித்து அறிவித்தார்.   அவ்வகையில் அவர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விவசாயத்துக்கான கூடுதல் வரியை விதித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.50 மற்றும் டீசலுக்கு ரூ.4 என வரி அதிக்ரிக்கப்ப்பட்ட்டுள்ளது.  இந்த கூடுதல் வரி விவசாய முன்னேற்றம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை தற்போது வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு வரும இந்நிலையில் இந்த வரி விதிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரலாம் எனத் தெரிய வந்துள்ளது.  இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்பதால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.