‘பிர்சா முண்டா’ படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித்.

பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் ஆர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

பாக்ஸிங் வீரராக நடிப்பதற்கு ஆர்யா முழுமையாக தன் உடலமைப்பை மாற்றியமைத்தார்.

இந்தப் படத்தின் பாக்ஸர் கதாபாத்திரத்துக்காக 6 பேக் வைத்துள்ளார் ஆர்யா. 6 பேக்கை மேலும் டைட் செய்யவே, வொர்க்-அவுட் பண்ணும்போது பக்கத்தில் நின்று கொண்டு ஒருவர் வயிற்றில் அடிப்பது போன்ற வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். ஆர்யா. இந்த வீடியோ மொத்தம் 0.27 விநாடிகள் கொண்டதாக இருக்கிறது.

இந்த வீடியோ தொடர்பாகத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பதிவில், “ஆர்யா சார்.. எனக்கே வலிக்குது. இவ்வளவு கஷ்டம் வேண்டாம் சார்.

நீங்கள் ஒரு அற்புதமான உள்ளம் கொண்டவர். நீங்கள் ரிங்கிற்குள் வந்து சிரித்துக்கொண்டே சண்டையிட்டால், எதிரி கீழே விழுந்துவிடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]