நாளை (டிசம்பர் 11) ஆர்யா தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 9) கமலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கமலிடம் காண்பித்து, அது தொடர்பாக நீண்ட நேரம் உரையாடியுள்ளார் ஆர்யா.

“இதைவிடச் சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைக்காது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு நீங்கள் காட்டும் அன்பினால் அதீத மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ‘சார்பட்டா’ படத்தில் எனது பணியை உங்களுக்குக் காட்டியதுதான் என் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக அமைந்தது. உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்ததற்குக் கோடி நன்றிகள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]