நடிகர் ஆர்யா-சாயிஷா சைகல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கடந்த 10-ம் தேதி ஹைதரபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், இரு வீட்டார் சம்மதத்துடன் ஆர்யா – சாயிஷாவின் திருமண நிகழ்ச்சி இஸ்லாமிய முறைப்படி நடந்தது.
இதனை தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.