
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி.
இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலின் லுக் கொண்ட போஸ்டர் டிசம்பர் 17-ம் தேதி வெளியானது.
இந்நிலையில் ஆர்யா லுக் கொண்ட போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் விலங்குடன் சாங்கி சிறை கைதியாக உள்ளார் ஆர்யா. அருகில் வரிசையாக துப்பாக்கிகள் இருப்பது போன்று உள்ளது. இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
[youtube-feed feed=1]All set to face my enemy @VishalKOfficial with full rage 🔥🔥💪💪 #ENEMY @VishalKOfficial @anandshank @Mini_StudioOffl @vinod_offl @MusicThaman @prakashraaj @mirnaliniravi @RDRajasekar @stuntravivarma @RamalingamTha @gopiprasannaa @RIAZtheboss @baraju_SuperHit pic.twitter.com/8dy22Pwrm9
— Arya (@arya_offl) February 4, 2021