ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலின் லுக் கொண்ட போஸ்டர் டிசம்பர் 17-ம் தேதி வெளியானது.

அதன் தொடர்ச்சியாக ஆர்யா லுக் கொண்ட போஸ்டர் வெளியாகியது. கையில் விலங்குடன் சாங்கி சிறை கைதியாக உள்ளார் ஆர்யா. அருகில் வரிசையாக துப்பாக்கிகள் இருப்பது போன்று உள்ளது. இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ‘எனிமி’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் நடிகர் ஆர்யா. இதனை கேக் வெட்டி படப்பிடிப்புக்குழு கொண்டாடியது.

ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலையிலும் தொடர்ந்து நடந்தது. நேற்றுடன் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்தன. அதனை கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். மேலும் ஆனந்த் சங்கர், விஷால் ஆகியோர் ஆர்யாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]