ஆர்யா இன்று தனது 40-வது பிறந்நதாளை கொண்டாடுகிறார்.

சார்பட்டா பரம்பரை குழுவினருடன் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பாக்ஸிங் ரிங் போன்ற கேக்கை வெட்டி சர்ப்ரைஸ் தந்துள்ளனர் படக்குழுவினர்.

நள்ளிரவில் நடந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆர்யாவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஆர்யாவின் பிறந்தநாள் என்பதால் நாக்-அவுட் கபிலனின் புதிய போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பா. ரஞ்சித். படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

 

[youtube-feed feed=1]