டெல்லி: ஆம்ஆத்மி அரசுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அமோக வெற்றி பெற்றார்.
தலைநகர் டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.அங்கு மாநிலஅரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில் துணைமுதல்வர் சிசோடியா மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க மோடி அரசு முயற்சி செவ்தாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 58 எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்
. பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இல்லாததால், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.