புதுடெல்லி:
துபான கொள்கையை மாற்றியது தொடர்பான வழக்கில் இன்று சிபிஐ விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக உள்ளார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின்மூத்த தலைவரும் டெல்லி துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாம் தர சித்ரவதை செய்து குடும்பத்தினரையும் கைது செய்வதாக மிரட்டியதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசி மூலம் கெஜ்ரிவாலைத் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று கார்கே சார்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.