டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனு மீதான விசாரணை நாளை (மே 9ந்தேதி) நடைபெற உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தட்டா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது (மே.7) கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணையை மே 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார் , இந்தியாவில் முதல்வர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே சிறையில் அடைக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு கோரிய அவரது மனு டெல்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசரரிக்கப்பட்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் அல்ல என்றும் வேறேதும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், நேற்று (மே 7ந்தேதி) நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர் தனது பணிகளை மேற்கொண்டால் மோதல்களை வழிவகுமா என்று கேள்வியெழுப்பினர்.
அதேவேளையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் அரசு பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையின்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்த முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு என தனி அணுகுமுறையை கையாளக் கூடாது என்று தெரிவித்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, பழைய மதுபான கொள்கை ஒழிக்கப்பட்டு, புதிய கலால் வரிக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் இல்லாமல் அரசு இயங்குவதாக சொல்லப்படுவதாக? கூறினார். ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கோப்புகளில் கையெழுத்திட மாட்டார் என தெரிவித்தார்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, இலாக்கா இல்லாத முதலமைச்சர் எந்த விதமான அரசு கோப்புகளில் கையெழுத்திட முடியாது என்றும் பிரதமராயினும் இலக்காக கொண்டு இருப்பின் அரசு கோப்புகளில் கையெழுத்திட முடியும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.