டில்லி:

த்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக டில்லி முதல்வர் அரவிநித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து சரிபார்க்காமல் வழக்கு தொடர்ந்தாகவும், அதற்கான வருத்தம் தெரிவிப்பதாகவும் ஆம்ஆம்தி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து,  இருவர் சார்பாகவும் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரித்த டில்லி  நீதிமன்றம், கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்படு வதாக கூறி உள்ளது.

சமீபத்தில், நிதின் கட்கரிக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், தங்கள் மீது தனக்கு எந்தவித தனிப்பட்ட விரோத மும் கிடையாது. தான் கூறிய குற்றச்சாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தன்மீதான அவதூறு வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, கெஜ்ரிவால் மீது நிதின்கட்கரி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு திருப்ப பெறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர் கெஜ்ரிவால்  மீது 33 அவதூறு வழக்குகள் உள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள கெஜ்ரிவால் அவதூறு வழக்குகளில் இருந்து விடபட முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாகவே நிதின் கட்கரியிடம் மன்னிப்பு கோரியதாகவும், அதன் காரணமாக வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபோல அனைத்து அவதூறு வழக்குகளையும் எதிர்கொள்ள கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கெஜ்ரிவால் சமீபத்தில், பஞ்சாப் அகாலிதள தலைவர் பிக்ராம் மஞ்சிதா மீது கூறிய சர்ச்சை காரணமாக பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி கட்சி தலைவர் பகவத் மான் கடந்த வாரம் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.