டிகர் அருண் விஜய், ஆர்த்தி தம்பதிக்கு புர்வி மற்றும் அர்ணவ் என இரண்டுகுழந்தைகள் உள்ளனர். இதில் மகள் புர்வியின் 12வது பிறந்தாளையொட்டி அருண் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ’எங்களதுதேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடர்ந்து உனது அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தருகிறது. என்றென்றைக்கும் இப்படியே இரு’ என குறிபிட்டிருக்கிறார்.


அருண்விஜய்யின் மனைவி ஆர்த்தி எழுதியுள்ள மெசேஜில்,’மகள்கள்தான் கடவுளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வர்கள். 12 வருடத்துக்கு முன்பு புர்வி பிறந்தபோது இன்ப அதிர்ச்சி அடைந்தோம். அவள் இந்த உலகுக்கு வர முடிவு செய்து எங்களை பெற்றோராக தேர்வு செய்தாள். அந்தநாள்முதல் எங்கள் மகளை எந்த குறையும் இல்லாமல் வளர்த்து வருகிறோம் . உன் வாழ்வு என்றும் பிரகாசமுடன் இருக் கட்டும். உன்னுடைய அன்பு என்றைக்கும் எங்களுடன் இருக்கட்டும். தனிமைப்படுத் தலில் இருந்தாலும் முழு மகிழ்வுடன் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.