இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் அருண் விஜய். Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர். அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அசுரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்த அம்மு அபிராமி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் கங்கை அமரன். காரைக்குடியில் அருண் விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.

காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்த படக்குழு, தற்போது நாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

படப்பிடிப்பின்போது கிடைத்த இடைவேளை நேரத்தில் நடிகர் அருண் விஜய், இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத்தலமான நாகூர் தர்காவிற்குச் சென்று தொழுகை நடத்தினார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

அப்புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய், “எம்மதமும் சம்மதம். அன்பைப் பரப்புங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.