அனல் பறக்கும் ‘ஆக்‌ஷன்’ காட்சிகளை கொண்ட சினிமாக்களை இயக்கியதன் மூலம் முன்னணி வணிக இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர், ஹரி.

நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியின் மகள் ப்ரீதாவை திருமணம் செய்துள்ள ஹரி, தனது படங்களில் மாமா விஜயகுமாரை நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் ஆக்‌ஷன் ஹூரோவான தனது மச்சான் அருண் விஜயை வைத்து படம் செய்ததில்லை.

முதன் முறையாக அருண் விஜயுடன் இணைந்து பணி புரிய உள்ளார், ஹரி.

சூரியாவுடன் ஹரி இணையும் படம் ‘டிராப்’ ஆகி விட்டதால், அருண் விஜய்க்கு ஆக்‌ஷன் கதையை தயார் செய்துள்ள ஹரி, திரைக்கதையை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் ஆரம்பமாகிறது. படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை. தூத்துக்குடி, காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பை முடித்து விட்டு, இறுதி கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார், ஹரி.

– பா. பாரதி