‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அன்புக்கோர் பஞ்சமில்லை’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் குழந்தைகளைச் சுற்றி நடக்கும் கதையாக உருவாகவுள்ளது. இப்படத்தை அருண் வைத்தியநாதனின் சொந்த நிறுவனமான யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.
விரைவில் இப்படத்தில் பணிபுரியவிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகையர் பற்றிய தகவல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.