மும்பை: சர்வதேச பலநாள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அருண்குமார் பரத்வாஜ்.
மும்பை-நாசிக்-புனே-மும்பை ஆகிய 3 நகரங்களுக்கு இடைப்பட்ட 560 கி.மீ. தூரத்தை, மொத்தம் 166 மணிநேரங்களில் ஓடி நிறைவுசெய்துள்ளார் இவர். இந்தப் போட்டி கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில், அருண்குமார் பலவித தொலைதூர ஓட்டங்களில் பங்கெடுத்துள்ளார். ஆனால், இந்த ஓட்டத்தை, மக்கள் மத்தியில், உடற்பயிற்சி செய்தல், ஓடுதல் உள்ளிட்ட விஷயங்களை பரவச் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.
அதேசமயம், அவர் தேர்ந்தெடுத்த இந்தப் பாதை சவாலானது என்றும், அது அதிக வெப்பமானது மற்றும் செங்குத்தான மலைத்தொடர்கள் கொண்டதென்றும் தெரிவித்துள்ள அவர், சவாலுக்காகவே இப்பாதையை தேர்வுசெய்ததாக கூறியுள்ளார்.