டில்லி
பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கடிதம் அனுப்பி உள்ளார்.
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது :
உற்பத்தி துறையில் அதிகமாக பெட்ரோலியப் பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. ஜி எஸ் டி க்கு முன் வாட் வரியை அவர்கள் திரும்ப பெற வாயப்பு உள்ளது. ஆனால் ஜி எஸ் டி வரி விதிப்புக்குப் பின் வாட் வரியை முழுமையாக பெற இயலாத நிலை உள்ளது. ஏற்கனவே முன்பு பல மாநிலங்களில் பெட்ரோலியப் பொருட்களுக்கான வாட் குறைந்த விகிதத்திலேயே இருந்துள்ளது.
இப்போது வாட் மற்றும் ஜி எஸ் டி இரண்டும் விதிப்பதால் பல உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு தேவையற்ற வரிச்சுமை உண்டாகிறது. அதை தவிர்க்க மாநில அரசுகள் ஜி எஸ் டி விதிக்கப்படும் உற்பத்திப் பொருட்களுக்கான பெட்ரோலியப் பொருட்களை குறைந்த வாட் வரி விதிக்க வேண்டும்
என அந்தக் கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.