டில்லி
சிகிச்சக்காக அமெரிக்க சென்றுள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிதிநிலை அறிக்கை தாகக்ல் செய்ய இந்தியா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் பிப்ரவரி மாதத்தில் பாஜக தற்போதைய அரசு நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பிறகு நடைபெறும் தேர்தலில் பாஜக வென்றால் இதே நிதிநிலை அறிக்கை தொடரும். பாஜக தோல்வி அடைந்தால் இது இடைக்கால நிதிநிலை அறிக்கையாக இருக்கும்.
வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. க்டந்த 2017 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதை பிப்ரவி 1 ஆக மாற்றினார். சென்ற வருடமும் அவ்வாறே தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வருடமும் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் நடக்கலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் சமயத்தில் முத்தலாக் மசோதாவையும் மாநிலங்களைவையில் ஒப்புதல் பெற மத்திய அரசு யோசித்து வருகிறது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதை ஒட்டி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக் அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றுள்ளார். ஆகவே அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வரமாட்டார் என ஒரு சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் அருண் ஜெட்லி விரைவில் இந்தியா திரும்பி நிதிநிலை அறிக்கையை அவரே தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் எனவும் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான நல திட்டங்கள் அறிவிக்கபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.