டில்லி:

காலியாக இருந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜ்யசபா பாஜக தலைவராக அருண்ஜெட்லி பதவி வகித்து வந்தார். இந்த பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் தெரிவித்தர். இந்த தகவலை நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அனந்த்குமார் ராஜ்யசபா சபாநாயகர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ராஜ்யசபா கூடியது. அப்போது ராஜ்யசபாவின் ஆளும்கட்சி தலைவராக நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.