டெல்லி:
பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதனால் பணத்தட்டுப்பாடு தொடரும் என்றே தெரிகிறது.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி. இதே மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சடித்து புழக்கத்தில் விடாது. இந்த பற்றாகுறையை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஈடுகட்டப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
 

டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் அருண் ஜேட்லி பேசுகையில், நிலையற்ற பொருளாதாரத்துடனே இந்தியா வெகுநாட்களுக்கு இருக்க முடியாது. அதனால் தான் பணமதிப்பிழப்பு என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது. புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த பணியை முடிக்க வெகு நாட்கள் ஆகாது. இந்திய ரிசர்வ் வங்கி இப்பணியை வெகு விரைவில் செய்து முடித்துவிடும் என்று கூறினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நம் நாட்டின் பொருளாதாரம் உயர்வதோடு, அதிக வரி வசூலாகிறது. கறுப்புப் பணமும் கள்ள நோட்டும் ஒழிக்கப்படும்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு ஈடான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படாது. பணப் புழக்கத்தைக் குறைத்து, அந்த பற்றாகுறையை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஈடு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண்ஜேட்லி பேசினார்.
Arun Jaitely FM lists reasons for shortage of currency notes and scarcity .