சிதம்பரம்

ன்று அதிகாலை உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

File pic

உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.  வருடம் தோறும் இந்த கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாகும்.  தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த தேரோட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிறகு பக்தர்களின் போராட்டம்  காரணமாகத் தேரோட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.  இன்று ஆருத்ரா தேரோட்டம் சிதம்பரத்தில் தொடங்கி நடந்து வருகிறது.  கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாகக் குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடந்து வருகிறது.

இந்த தேரோட்டத்தில் முருகப் பெருமான், விநாயகர், நடராஜர் ஆகிய சாமிகள் கொண்ட 5 தேர்தல் இடம் பெற்றுள்ளன.  இவை ரத வீதிகளில் இழுத்துச் செல்லப்படுகின்றன.  இந்த தேரோட்டம் மதியம் வரை நடைபெற உள்ளது.  ஆர்வமுடன் பக்தர்கள் வடம் பிடித்து வருகின்றனர்.  தேரோட்டத்தின் போது புகைப்படங்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.