தாய்லாந்து பாடல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலானது.

தாய்லாந்து இசைக் கலைஞரான நொய் சிர்னிம், முதன்முதலாக 2010ம் ஆண்டில் ‘டோங் பாவே க்ரஹ்மம்’ என்ற பாடலில் நகைச்சுவையாக பயன்படுத்திய வரிகள் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

“அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா” என்று அதனை தமிழில் வைப் செய்து வரும் இளைஞர்கள் இந்தப் பாடலை பட்டி தொட்டியெங்கும் பரப்பி வருகின்றனர்.

மேலும், இந்தப் பாடலை பிரபலங்கள் பலரும் அதை ரீ-கிரியேட் செய்து இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது இந்தப் பாடல் கோயில் திருவிழாக்களில் ஊர்வலமாக செல்லும் நாயன மற்றும் தவிலிசை கலைஞர்களிடமும் பிரபலமடைந்து வருகிறது.