சென்னை:
அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப் பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், குழந்தை இல்லாத ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.