நாகர்கோவில்,

ன்னியாகுமாரி மாவட்டம் அருகே பெற்ற குழந்தையை கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ய முயன்ற கொடூர மனம் கொண்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே தக்கலையை அடுத்த ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராபின்சன். இவரது மனைவி மேரிபியர்லி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில் மூன்றாவதாகவும் மேரி கர்ப்பமுற்றார்.

சம்பவத்தன்று மேரிபியர்லி பிரசவத்திற்காக குளச்சல் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான  பெண்குழந்தை பிறந்தது.

ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகவும் ஆண்குழந்தை பிறக்கும் என் எதிர்பார்த்திருந்த ராபின்சன்,  பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரம் அடைந்தார்.

பிறந்த குழந்தையை காண சென்ற அவர், தனது கையில் இருந்த   கைக்குட்டையால் குழந்தையின் முகத்தில் அமுக்கிக் கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட நர்ஸ்கள்,  சத்தம் போட்டதையடுத்து, அங்கு வந்த ஊழியர்கள் ராபின்சனிடம் இருந்து குழந்தையை மீட்டு, அவசரபிரிவில் அனுமதித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பெண் குழந்தையைக் கொலை செய்ய முயன்ற வழக்கறிஞர் ராபின்சனை கைது செய்தனர்.

சட்டம் படித்த வக்கீல் ஒருவரே இதுபோன்ற படுபாதக செயலில் இறங்கியது பரபரப்பாக பேசப்படுகிறது.