மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் – ராகுல் டுவிட்

Must read

புதுடெல்லி:
மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாவல் விடுத்துள்ளார்.

கொரோனா நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் சுவரொட்டிகளை வெறுமனே போட்டதற்காக டெல்லியில் பலர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

“என்னை கைது செய்யுங்கள்” என்று திரு காந்தி இன்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ட்வீட் செய்துள்ளார், மேலும் “கருப்பு பின்னணியில் வெள்ளை இந்தி எழுத்துக்களில் “மோடி ஜி, எங்கள் குழந்தைகளுக்கு, ஏன் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பினீர்கள்?” என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பெரிய சர்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியித்டுளால் டுவிட்டர் பதவில், மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

More articles

Latest article