சென்னை: பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   அவரை  கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது.  இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யுடியூபரான சவுக்கு சங்கர்,  திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.  மேலும் காவல்துறையினரின் அராஜகம்  அத்துமீறல் உள்பட பல தகவல்களை மக்களிடையே வெளியிட்டு வருகிறார்.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக ஊடங்களிலும் அவரது பேட்டி, வீடியோ வைரலாகி வருகின்றன. இதனால், அவரை முடக்கும் நோக்கில் ஏற்கனவே பல வழக்குகளை போட்டு, கைது செய்து, சிறையில் அடைத்தது  தமிழ்நாடுஅரசு,  பின்னர் உச்சநீதிமன்றத்தின்மூலம்  ஜாமினில் வந்த அவரது வீட்டின், ஆளும்கட்சியின் ஆதரவாளர்கள் மூலம்  வீட்டிற்குள்  மலத்தை வீசி அராஜகம் செய்தது.  இருந்தாலும் சவுக்கு சங்கர், திமுக அரசுக்கு எதிராக   தொடர்ந்து வீடியோ  வெளியிட்டு வருகிறார்.

சமீப நாட்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன், தொழிற்துறை அமைச்சர் டிஆர்.பி.ராஜா,  நடிகர் சத்யராஜ் மற்றும்அமைச்சர் நேரு ஊழல், திருப்பரங்குன்றம் விவகாரம் என பல நிகழ்வுகள் குறித்தும், அதில் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த அரசாங்கம், அவரை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

ஏற்கனவே என்னை போலி என்கவுண்டர் செய்ய சதி செய்வதாகவும், கொலை செய்ய முயற்சி நடைபெறுவதாகவும் சவுக்கு சங்கர் திமுகஅரசுமீது குற்றம் சாட்டி உள்ள நிலையில், விடுமுறை தினமான இன்று அவரை கைது செய்ய காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே சவுக்கு சங்கர் வீட்டைசுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதை அறிந்தசவுக்கு சங்கர் வீட்டின் கதவை திறக்காமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.. இதை காவல் துறை அதிகாரி ஒருவர் தனது உயர் அதிகாரிக்கு போனில் தகவல் கொடுத்தார். “சார் தனது அட்வகேட் வந்தால் மட்டுமே கதவை திறப்பேன் என்று கூறுகிறார்” என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

 “என்னை கைது செய்ய வந்த 20 போலீஸ்”! என சவுக்கு சங்கரே  வீடியோ வெளியிட்டுஉள்ளார்.  சவுக்கு சங்கரை கைது செய்ய ஆதம்பாக்கம் போலீஸார் இரு வேனில் வந்து காத்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வழக்கறிஞர் சம்மனை கேட்டால் அதை தர போலீஸார் மறுப்பதாகவும் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.

இதுகுறித்து சவுக்கு சங்கர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நானும் மாலதி, மொத்த சவுக்கு மீடியா டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம். கீழே இரண்டு போலீஸார் வேன்களில் 20 பேர் காத்திருக்கிறார்கள்.

சம்மனை கொடுங்கள் என எனது வழக்கறிஞர் கேட்டால் கொடுக்க மறுத்து கதவை திறக்க வேண்டும் என தொடர்ந்து சென்னை மாநகர போலீஸார் தன்னை மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்னொருவரிடம் கூறுகையில், 3 வழக்கறிஞர்கள் வந்தும் எங்களை வீடியோதான் எடுக்கிறார்கள். சம்மனை ஏற்கெனவே அவருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் எங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறீர்கள், எவ்வளவு நேரம் காத்திருப்பது, அதனால் கைது செய்கிறோம் என அந்த போலீஸ் அதிகாரி கூறுகிறார்.

மேலும் தகவல்களுக்கு  https://x.com/Savukkumedia

[youtube-feed feed=1]