டில்லி
தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினருக்குத் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய உள்ளது.
நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன .
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில்,
“தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டாகக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.