
A.R.ரஹ்மான் தற்போது புதிய ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட உள்ளார். Anthem of Hope என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடலை பிரபல ஹிந்தி பாடலாசிரியரான குல்சார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை நாடு முழுவதும் இருக்கும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.
அல்கா யாக்னிக், K.S. சித்ரா,ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம், சாஷா திருப்பதி, அர்மன் மாலிக் ,ஆசிஸ் கௌர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel