லண்டன்:
சாம்சங் ஸ்மார்ட் போன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி பிராட் பேண்ட் சேவையை பிரிட்டனில் வெள்ளோட்டம் நடத்த ஆர்கிவா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மொபைல் போன் மற்றும் ஒளிபரப்பு சேவை கோபுர தொழிலில் ஈடுபட்டு வரும் ஆர்விகா வலுவான மொபைல் போன் துறையை தன் கைவசம் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் மூலம் 5 ஜி கம்பி மற்றும் கம்பியில்லான தொழில்நுடபத்தை மத்திய லண்டனில் இந்த சேவையை பரிட்சாத்திர முறையில் செயல்படுத்தும் வகையில் திட்டமிட்டு வருகிறது.
அது அந்த நிறுவனத்துக்கு அடுத்து ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது. 8 ஆயிரம் மையங்களுடன் தகவல் ஒளிபரப்பு மற்றும் மொபைல் போன் அழைப்புகளை இணைக்கும் சேவையை சிறப்பான முறையில் அந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அந்நிறுவன முதன்மை நிர்வாகி சைமன் பிரேஸ்ஃபோர்டு கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களை நேரடியாக அணுக முடியாத காரணத்தால் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. நாங்கள் அவர்களது வாடிக்கையாளர்களுக்காக போட்டியிடவில்லை’’ என்றார்.
ஆர்கிவா நிறுவனம் 28ஜிஹெச் ஸ்பக்டரம் பேண்டுக்கான தேசிய உரிமையை லண்டனில் பெற்றுள்ளது. இதே திறனில் தான் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் 5 ஜி செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய வெள்ளோட்டத்தை பிரிட்டன் அரசின் கலாச்சார செயலாளர் கரன் ப்ரேட்லி வரவேற்றுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘5 ஜி சேவையி பிரிட்டன் உலகளவில் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்பட வெற்றிகரமான தொடக்கத்துக்கு அடித்தளம் இட்டுள்ளோம். 5 ஜி வெள்ளோட்டத்துக்கு உதவும் வகையில், அதற்கு ஏற்ற டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஏற்படுத்த 1 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்கிவா நிறுவனத்தின் முதலீடு காரணமாக 5ஜி சேவையின் பலனை பிரிட்டன் விரைந்து பெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு 15 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்ட ரெலிஷ் என்ற பிரிட்டன் பிராட் பேண்ட் நிறுவனம் 5 ஜி கம்பி சேவை அறிமுகம் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.