டில்லி:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 51 இளம்பெண்கள் சென்று வந்துள்ளதாக கேரள மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

சபரிமலை கோவிலுக்கு  அனைத்து வயது  பெண்களும்  செல்லலாம் என ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட் டங்கள் நடைபெற்றன.

உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. வழக்கை உடனே விசாரிக்கவும் கோரினா. ஆனால்,  சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளும் னவரி 22ல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில்,  அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 16ந்தேதி முதல் பக்தர்கள் சென்று வருகிறார்கள்.   பெண்கள் செல்ல பல அமைப்புகள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், கேரள மாநில அரசு மற்றும் காவல்துறை உதவியுடன் மாறுவேடமிட்டு சில  பெண்கள் அய்யப்பனை தரிசித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சபரிமலை மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை 22ந்தேதி நடை பெற உள்ள நிலையில், சபரிமலையில் தரிசனம் செய்தவர்கள் குறித்த தகவல்களை உச்சநீதி மன்றத்தில் கேரள மாநில அரசு தாக்கல் செய்துள்ளது.

அதில், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 16 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்ததாகவும்,  இவர்களில் 8.2 லட்சம் பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், 7564 பெண்கள் சபரிமலை செல்ல விரும்பி 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்திருந்த நிலையில் 51 இளம்பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்று வந்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

சபரிமலை கோவில்  வரும் 20ந்தேதியுடன் நடை சாத்தப்பட உள்ள நிலையில், கேரள அரசின் தகவல்  கேரளாவில் மீண்டும் சலசலப்பை எற்படுத்தி உள்ளது.