தர்மபுரி: ‘”சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்” என தருமபுரியில்  மக்களுடன் முதல்வர்  திட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது,  அரூர் நகராட்சியாக உயர்த்தப்படும் என்றும்  கூறினார். மேலும் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த மக்களுடன் முதல்வர் விரிவாக்கம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, 2500  ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை இன்று முதலமைச்சர்  ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் மனு வாங்கும் அலுவலகத்திற்கு வந்திருந்து  அங்கு மனு கொடுக்க வந்தவர்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,  தேர்தலுக்கு முன்பே பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 100 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தோம். சாத்தியமுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன என்றார்.  மக்கள் இருக்கும் இடத்திலேயே மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண வே மக்களுடன் முதல்வர்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்றவர், பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. என்றார்.

மேலும், அரூர் அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றவர், பேரூராட்சியாக உள்ள அரூர், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். என்று கூறியவர்,  சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலும் செய்வோம் என கூறினார்.,.

 தி.மு.க., அரசு மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். தமிழகத்தில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு நல்ல மனம் மற்றும் குணம் இல்லை.

10 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ., தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. வெற்றி ரகசியம் மத்திய அரசு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன். திமுக பொறுத்தவரை நாங்கள் மக்கள் கூட இருக்கிறோம். இது தான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். மக்களுக்கு உண்மையாக இருந்து வளர்ச்சியை உருவாக்குவோம்.

தருமபுரி மாவட்டத்திற்கு 7 அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

  1. அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
  2. ரூ. 51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
  3. வெண்ணாம்பட்டி சாலையில் ரயில்வே மோம்பாலம் ₹31 கோடியில் மேம்படுத்தப்படும்.
  4. பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைகட்டுகள் ₹50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.
  5. அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் சாமை, ராகி ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுசெயலாக்க மையம் அமைக்கப்படும்.
  6. தீர்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்கம் அமைக்கப்படும்.
  7. பளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.