
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது.
சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ்.
ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சுழட்டி அடிக்கும் கொரோனா வைரஸிற்கு உலகின் பல முன்னணி நடிகர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும் கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், கோவிட்-19 தொற்றைக் கையாளும் மருத்துவமனைகளில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel