டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் பிரபல நெறியாளுனரும் அதன் செய்தி ஆசிரியருமான அர்ணாப், அத் தொலைக்காட்சி பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரல ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ்நவ் – இல், பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமானவர் அர்னாப் கோஸ்வாமி. தனது நிகழ்ச்சியின் போது, விருந்தினரை பேச விடாமல் இவரே பேசுவது, இவருக்கு பிடிக்காத விசயங்களை விருந்தினர் பேசினால் அவர்களது மைக்கை அணைத்துவிடுவது, அநாகரீக தொணியில் கத்தி கத்தி பேசுவது என்று அர்ணாப் மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. இவரது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் இவரது செயல்பாடுகளை பகிரங்கமாக குறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவரது இந்த செயல்பாடுகளே நிகழ்ச்சிக்கும், அவருக்கும் பிரலத்தை தந்துவிட்டன என்பதையும் மறுக்க முடியாது.
இவர் இந்துத்துவ ஆதரவாளர் என்கிற முத்திரையையும் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து தாம் விலகுவதாக அர்ணாப் அறிவித்துள்ளார். சொந்தமாக புதிய தொலைக்காட்சி ஒன்றை துவக்கப்போகி்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel