புதுடெல்லி: வலதுசாரி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி, வலதுசாரி சித்தாந்தியான சாவர்க்கரின் சாதனையை, மன்னிப்புக் கேட்கும் விஷயத்தில் முறியடித்துள்ளார்.

இவர், பிரிட்டனின் மீடியா செயல்பாட்டு கண்காணிப்பு அமைப்பிடம் மொத்தம் 280 முறை மன்னிப்புக் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம், வெறுப்பை விதைக்கும் உரை உள்ளிட்ட சில தவறான விஷயங்களை அந்த சேனல் ஒளிபரப்பு செய்ததற்காக, பிரிட்டனின் மீடியான செயல்பாட்டு கண்காணிப்பு அமைப்பு, இந்திய மதிப்பில் ரூ.19.73 லட்சத்தை அபராதமாக விதித்தது. இதனையடுத்தே, இத்தனை மன்னிப்பு அஸ்திரங்களை ஏவியுள்ளார் அர்னாப் கோஸ்வாமி.

பிரிட்டனில் செயல்படும் அவரது சேனலில், இந்தாண்டு பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 9 வரையான காலக்கட்டத்தில், அவர் தொடர்ச்சியாக மன்னிப்புக் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரப் போராட்ட காலத்தில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்துத்துவ சிந்தனையாளர் சாவர்க்கர், பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.