விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ராணுவ  உயரதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி மாவட்டம், சுக்னா என்ற இடத்தில் ராணுவ முகாம் அருகில் இன்று  பகல்  11.45 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளா ஹெலிகாப்டர் பெயர் சீட்டா – (சிறுத்தைப்புலி)
வழக்கமான பணிகளை முடித்துவிட்டு திரும்பி,  ராணுவ முகாம் ஹெலிபேடில் இறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 3 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.