பெங்களூரு:

இந்தியாவில் தயாரித்த எல்சிஏ தேசஸ் போர் விமானத்தில் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் முதல்முறையாக பயணம் செய்தார்.


இந்த போர் விமானம் எடை குறைந்ததாகவும், அதிக சக்கரங்கள் கொண்டதாகவும் இருக்கும்.

பெங்களூருவில் நடந்த விமான கண்காட்சியின்போது எல்சிஏ போர் விமானத்தில் முதல் முறையாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் பயணம் மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, இந்த போர் விமானம் மிகவும் அருமையானது. இதனை உருவாக்கிய ஏர் மார்ஷல் பிஎஸ். தனோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

அரை மணி நேரம் பறந்த இந்த விமானத்தில் ராணுவ தளபதியுடன் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோகர் பி.எஸ். ராகவனும் பயணம் செய்தார்.

இலகுவான இந்த விமானத்தில் பெரிய விமானங்களில் உள்ளதுபோல் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்ணுக்குப் புலப்படாத தொலைவில் எதிரி நாட்டு விமானம் வந்தால், முன்னரே அறிந்து பாதுகாப்பான இடத்தில் தரையிறங்க முடியும்.

இந்த விமான கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.