சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமன் அதிர்ச்சியூட்டும் வகையிலான பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒவ்வொருவராக, தங்கள் காவலில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அருணை போலீஸ் காவலில் விசாரித்தபோது அஸ்வத்தாமனுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் இதுவரை 6 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடுசுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில், திமுக, அதிமுக, பாஜக, தமாகா உள்பட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல வழக்கறிஞர்கள், ரவுடிகள் என அடுத்தடுத்து பலர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ஆம்ஸ்ட்ராங் எனப்படும் ஒரு ரவுடியை கொல்ல பல ரவுடிகள் ஒன்றிணைந்து செயல்பட்டுஇ, தீர்த்து கட்டியது தெரிய வந்தது.
ஆனால், இந்த கொலை விவகாரம் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் பெரிய சதி இருப்பது போலீஸாரின் தொடர் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கட்டப்பச்சாயத்து, நிலஅபகரிப்பு, போதை பொருள் விற்பனை போன்றவற்றில் ரவுடிகள், அரசியல் கட்சிகைள சேர்ந்த நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாகவே ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இநத் கொல தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரையும் தனித்தனியாக தங்கள் காவலில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர்.
இவர்களிடம் தனித்தனியாகவும், நேருக்கு நேர் வைத்தும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
போலீசாரிடம் அஸ்வத்தாமன் கூறிய தகவலில், எனது தந்தைக்கும், உங்களுக்கும் தான் முன் விரோதம் என ஆம்ஸ்ட்ராங்கிடம் கூறி அவருடன் நெருங்கிய பழகியதாகவும், அவருடன் அன்பாக இருப்பதை காட்டிக்கொள்ளும் வகையில், ஆம்ஸ்டிராங்கை அங்கிள் என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அவருக்கு தன்மீது சந்தேகம் ஏற்படவில்லை என்று கூறியிருந்ததுடன், அவர் உயிருடன் இருந்தால், தங்களது ரவுடியிசம் வடசென்னை பகுதிகளில் செல்லுபடியாகாது என்பதால், ஆம்ஸ்டிராங்கை நேரம் பார்த்து போட்டுத் தள்ள முடிவு செய்து, அவருடன் இணைந்து செயலாற்றுவதாக கூறி பழகி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆம்ஸ்டிராங் குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் குடும்ப உறுப்பினர்போல கலந்துகொண்டு, முன்னின்று செயலாற்றுவதுபோல நடித்து வந்ததாகவும், அதன் மூலம் ஆம்ஸ்டிராங் ஏ டூ இசட் நடவடிக்கைகளை முழுமையாக அறிந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
வடசென்னையில் ஆம்ஸ்டிராங் வளர்ந்து வருவதால், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கட்டதல், மாமுல் வசூலிப்பு, போதை பொருள் விற்பனை, நில அபகரிப்பு போன்ற பிரச்சினைகளில், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என அஞ்சியதால், ஆம்ஸ்டிராங்கை தீர்த்து கட்ட கட்டம் கட்டப்பட்டதாகவும், இதற்காக பலரிடம் ரகசிய ஆலோசனை நடத்திய தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலை தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். அவர் போலீஸாரின் வியூகம் அறிந்து, தனது இருப்பிடத்தை தொடர்ந்து மாற்றி வருகிறார். இதனால், அவரைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கைது செய்யப்படுவார் எனவும் போலீஸார்தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் இருந்து அஸ்வதாமன் நீக்கம்! மாநிலதலைவர் அறிவிப்பு…