சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான  ரவுடி நாகேந்திரன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி பிரபல ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார். கல்லீரல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாகேந்திரன் அனுமதிக்கப்பட்டு பெற்று வந்த நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கின் முக்கிய கைதியான ரவுடி நாகேந்திரன்  வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.   அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். . இந்த நிலையில், உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் (ரெலா) மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, ரவுடி நாகேந்திரன் மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு வாரமாக இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம் அவர் இறந்ததாகவும் தகவல்கள் பரவியதால், பல முக்கிய பிரமுகர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் கூடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.