பிக்பாஸ் வீட்டில் முதல் நாளை விட நேற்று எக்கச்சக்க சண்டைகள் நடைபெற்றன. அனிதா சோமசேகரிடம் எதையோ திரும்ப, திரும்ப கேட்டார். பதிலுக்கு சோம், ”நீ பேசறதை கேட்கணும்னு அவசியம் இல்லை,” என டென்ஷனாகி கத்தி விட்டார். மிகப்பெரிய அளவில் சுரேஷ்-சனம் சண்டை வெடித்தது .
சுரேஷ் அரக்கர்கள் குடும்பத்தை சேர்ந்த ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோரை கையில் வைத்திருந்த கட்டையால் லேசாக தட்டி மிரட்டி கொண்டிருந்தார். இதேபோல அவர் சனத்தின் தலையிலும் தெரியாமல் தட்டி விட்டார்.
பலமுறைகள் மன்னிப்பு கேட்டும் சனம் அவரை விடுவதாக இல்லை. இதை பெரிய பஞ்சாயத்து ஆக்கினார். கடைசியில் அர்ச்சனா, சுரேஷை அழைத்து சனத்திடம் ஸாரி கேட்க வைத்தார். தொடர்ந்து கன்பெக்ஷன் ரூம் சென்று பிக்பாஸிடமும் அவர் மன்னிப்பு கேட்டார். அப்போது அவர் அழுதது பரிதாபமாக இருந்தது. இதுவரை கிண்டலும், கேலியுமாக இருந்த சுரேஷ் முதல்முறையாக நேற்று குமுறிக்குமுறி அழுதார்.
வெறுப்பேற்றும் வேலைக்கு தேவையான பொருட்களை அரக்கர்கள் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி, சனம் ஆகியோர் கிச்சன், பாத்ரூம் போன்ற இடங்களில் இருந்து எடுத்து வந்தனர். இதைப்பார்த்த ‘தேவசேனா’ ஷிவானி எரிச்சலாகி ஏன் இதுமாதிரி பண்றீங்க? என சனமை கேட்டார். பதிலுக்கு சனம், நேத்து உங்களுக்கு இந்த அறிவு இல்லன்னு பொறாமை,’ என கலாய்க்க பதிலுக்கு ஷிவானி, ”உங்களுக்கு அறிவே இல்லை,” என்றார்.
#Day18 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/n2KZQCgkU0
— Vijay Television (@vijaytelevision) October 22, 2020
இந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் மீண்டும் குரூப்பிஸம் பிரச்சனை தலைதூக்குவது காட்டப்பட்டுள்ளது. ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது காட்டப்பட்டு இருக்கிறது.”இரண்டு நிமிடமாவது ஒன்றாக பேசி விட்டு எழுந்து போகலாம் என நினைத்தேன், ஏனென்றால் எப்போதும் குரூப்பிசம் என சொல்லி கொண்டே இருக்கிறார்கள்” என ரியோ சொன்னார்.அதற்கு ரம்யா பாண்டியன் ‘உங்கள் மனதில் வேறு எதோ இருக்கிறது ரியோ. குரூப்பிசம் உங்கள் மனதில் இருக்கிறது என்பதால் நீங்கள் இதை கொண்டு வந்திருக்கிறீர்கள் என எனக்கு தெரியாது என கூறி இருக்கிறார். இதனால் இன்று மீண்டும் ஒரு பிரச்னை தலைதூக்குவது தெரிகிறது.
#Day18 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/7g7X9hPSyD
— Vijay Television (@vijaytelevision) October 22, 2020
இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோமோவில் பட்டிமன்றம் நடக்கிறது .
#Day18 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/AWXPbdYL1G
— Vijay Television (@vijaytelevision) October 22, 2020