பலர் முகம் கழுவுகிறேன் என்று ஏனோதானோவென்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவார்கள். முகம் கழுவும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் சில பெண்களுக்கு ஃபேஷ் வாஷ் செய்யும் போது பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் பின்பற்றக்கூடாதவைகள் பற்றி தெரியவில்லை.
அதனால் பெண்கள் பல சரும பிரச்சனைகளை சந்தித்து, சருமத்தின் அழகையே கெடுத்துக் கொள்கிறார்கள். சருமத்திற்கு ஏற்ற ஃபேஷ் வாஷை பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல நறுமணமிக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். முடிந்த அளவு மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்துவது தான் சருமத்திற்கு நல்லது.
குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.
மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி, முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும். முகத்தை கடுமையாக தேய்த்து கழுவக்கூடாது. கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.
அல்லது மென்மையான டவலால் ஒற்றி எடுக்க வேண்டும். மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிம்பிளாக மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்தி முகத்தைக் கழுவினாலே போதுமானது.
-நெட்டிசன்