முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்ட அவர் அன்பு ஜெயிக்கும் என்று கூறி கொண்டே இருந்ததால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
அன்பு ஜெயிக்கும் என்று கூறி கொண்டே இருந்ததால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
யூடியூப், இன்ஸ்டாகிராமிலும் தனது மகளுடன் சேர்த்து வீடியோ ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் ஷேர் செய்த பாத்ரூம் டூர் வீடியோ பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அர்ச்சனாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே செய்தி வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ள அர்ச்சனா, அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். அதில், அனைவரும் நலமாக இருப்பதாக நம்புகிறேன். எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது என் மண்டை ஓட்டை லேசாக பாதித்துள்ளது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.
இன்று எனக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வேடிக்கையாக கூறியுள்ள அர்ச்சனா, இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது, அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.