அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் 178 நிமிடங்கள் 59 விநாடிகள் நேரம் கொண்டது என தணிக்கை சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது.

அக்டோபர் 25-ம் தேதி திரைப்படம் வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் ’பிகில்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமும் சென்னையின் எப்சி கால்பந்து அணியில் இணைந்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் சென்னையின் எப்சி ஆகிய பெயர் கொண்ட ஜெர்ஸியை அவர் அறிமுகம் செய்துள்ளார்.

[youtube-feed feed=1]