சென்னை:  திருப்பரங்குன்றம் மலை மேல்  தீபத்தூன் குறித்து சர்ச்சையை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு  தொல்லியல் துறைஅதிகாரிகள், அதை இஞ்ச் பை இஞ்சாக அளந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு  சுமார்  3.5 மணிநேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

திருப்பபரங்குன்றம் மலை, முருகனுக்கே சொந்தமானது என ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த மலையின் உச்சிமீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை திமுக அரசு ஏற்க மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.

அவரது உத்தரவு டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளின்போது நிறைவேற்றப்படவில்லை.  அதற்கு பதில் அறநிலையத்துறை தரப்பில்,  மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதுநீதிமன்ற அவமதிப்பு எனகூறி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிபதி மீண்டும் தீபம் ஏற்ற அறிவுறுத்திய நிலையில், அதை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதுடன், தேவையற்ற போலீசாரை குவித்து சர்ச்சையை உருவாக்கியது.  தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

,இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததால், ராம ரவிக்குமார் மீண்டும் ஒரு மனுவை டிசம்பர் 3 அன்று தாக்கல் செய்தார். அதில், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார். இதுதொடர்பாக டிஜிபி தலைமை செயலாளர் காணொளி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோர் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 3 மணிக்குக் காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மத்திய உள்துறைச் செயலரையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க மனுதாரர் தரப்பு கோரியதன் அடிப்படையில், மத்திய உள்துறைச் செயலருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர்  நேற்று  (டிசம்பர் 10) மலை மேல் உள்ள தீபத்தூண் உள்ளிட்ட இடங்களில் மூன்றரை மணி நேரம் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சென்னை தமிழ் வளர்ச்சி வளாகம் தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் மூலம், மதுரை ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது.

நேறறு காலை 8:10 மணிக்கு, தொல்லியல் துறை துணை இயக்குநர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறை குழுவினர் மலை மேல் சென்றனர். அவர்கள் தீபத்தூண் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மூன்றரை மணி நேரம் தீவிர ஆய்வு நடத்தினர். குறிப்பாக, தீபத்தூணின் உயரத்தையும் அதன் அமைப்பையும் துல்லியமாக அளவீடு செய்தனர்.

இந்தக் குழுவுடன் திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, ஆர்.ஐ. திருக்கண்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) சுந்தரேசன், முத்துசாமி, மனோஜ் ஆகியோர் உடன் சென்றனர். ஆய்வை முடித்துக்கொண்டு, தொல்லியல் துறைக் குழுவினர் காலை 11:45 மணிக்கு மலையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தொல்லியல் துறையின் இந்த ஆய்வறிக்கை, கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தொல்லியல் துறை அதிகாரிகள்,  தீபத்தூணை காலனியுடன் சென்று ஆய்வு செய்ததை இந்து மக்கள் கட்சி கண்டனம் செய்துள்ளது. இதுகுறித்து,   மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், ஆய்வு என்ற பெயரில் தீபத்தூணில் உள்ள ஆவணங்களை அழிப்பதற்காக தான் தமிழக அரசு தொல்லியல் துறையை அனுப்பியதா? என்ற பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகிறது என கூறியுள்ள அவர்,

தமிழக தொல்லியல்துறை மலையை ஆய்வு செய்வதற்கு உயர்நீதிமன்றத்தில் ஏதேனும் அனுமதி பெற்றார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக அரசு தன்னுடைய கட்டுபாட்டில் இருக்கும் தமிழக தொல்லியல் துறையை இத்தனை நாள் கழித்து என்ன காரணத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பியது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  காலணி அணிந்து தீபத்தூணை ஆய்வு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

 

[youtube-feed feed=1]