நடிகர் அரவிந்த் சாமி, புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஒட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்குகின்றனர். தமிழில் இப்படத்திற்கு ‘ரெண்டகம்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

அரவிந்த் சாமி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘தேவராகம்’ எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘ஒட்டு’ படம் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் சாமி, நேரடி மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.