ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.
ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் தன்னை எம்.ஜி.ஆராக மாற்ற மேக்கப் போட்ட, தேசிய விருது வென்ற மேக்கப் மேன் ரஷித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.
“புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி”.
இவ்வாறு அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
The man working his magic on me for the last time in this film to get me as close as possible to the beauty and charm of Puratchi Thalaivar – ty Rashid sir..🙏 Last day of shoot #Thalaivi pic.twitter.com/NH4D3tWMvH
— arvind swami (@thearvindswami) December 15, 2020