dsc_21052

மோசடி, கருப்புப்பணம், அரசியல் பற்றி ஏதாவது மீம் வந்தால் தனிஒருவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறமால் இருப்பதில்லை. படத்தில், இந்தியாவில் நடந்து வரும் மோசடிகளின் மொத்த உருவமாக வாழ்ந்திருப்பார் அரவிந்த்சாமி.

அதேபோல், சில வருடங்கள் முன்புவரை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டிசைன், டிசைனாக ஏமாற்றும் கும்பல்கள் பற்றி எடுக்கப்பட்ட சதுரங்கவேட்டை படம் சுப்பர் ஹிட் அடித்தது. இந்த இரண்டு படங்களும் மக்களின் வாழ்க்கையில் நடக்கும் பித்தலாட்டங்களை தோலுரித்து காட்டிய படங்கள்.

பித்தலாடத்திற்கு பெயர்போன, சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார் என்றால், கதை சாதாரணமானதாகவா இருக்கும். உலகின் மோசமான கிரிமினலாக நடிக்கின்றாராம். ஹைடெக் திருடர்களின் லீலைகளை அம்பலப்படுத்தும் கதையாம். ஹாலிவுட் காட்சிகளுக்கு இணையாக திரைக்கதை அமைத்துள்ளார்கலாம்.

சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஜெயில் செட் போட்டு படம் பிடித்துள்ளனர். இந்த ஜெயில் காட்சியே படத்தில் 20 நிமிடம் வருமாம். அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பும் காட்சியை மிரட்டலாக எடுத்துள்ளனராம்.

[youtube-feed feed=1]