டில்லி

த்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு டில்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். நாடெங்கும் இந்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்றி டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிண்ட் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால்

“பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசத்தில் இருந்து பெருமளவிலான ஏழை சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருவதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. இதனால் 1.5 கோடிக்கு அதிகமான சிறுபான்மையினர் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்து  ஒரு அபாயகரமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நமது அண்டை நாடுகளில் வசிக்கும் ஏழை சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேறி அதன் வாக்கு வங்கியாக மாறுவதால், வரும் தேர்தலில் பாஜகவுக்கு லாபம் கிடைக்கும். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது பாஜகவின் மோசமான வாக்கு வங்கி அரசியல் ஆகும்..

உள்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் படையே இருக்கிறது, போர் முனையாக இருக்கும் இஸ்ரேலுக்கு அரியானா பாஜக அரசு இளைஞர்களை அனுப்பிச் சாகடிக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களது பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

இவ்வாறு நமது குழந்தைகளின் வேலை உரிமையைப் பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கு வழங்குவது என்ன மாதிரியான முட்டாள்தனம்?  இந்தியாவை விட்டுக் கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்”

என்று கூறி உள்ளார்.